2018/19 கல்வியாண்டு மாணவர்களுக்கான மகாபொல புலமைப்பரிசில்

2018/19 கல்வியாண்டு மாணவர்களில் மகாபொல புலமைப்பரிசில்களுக்கு தகுதியான மாணவர்களுக்கு ஓர் விண்ணப்பப் படிவம் கல்வி வழிகாட்டல் விரிவுரைகளின் போது வழங்கப்பட்டது. சில மாணவர்கள் படிவத்தை பூர்த்தி செய்து திருப்பி கலைப்பீடாதிபதி அலுவலகத்தில் ஒப்படைத்து கையொப்பம் இட்டு விட்டார்கள். சில மாணவர்கள் படிவத்தை பூர்த்தி செய்து இறுதி நாள் குழப்ப நிலையின்போது ஒப்;படைத்துள்ளார்கள் ஆனால் லிஸ்டில் கையொப்பமிடவில்லை.மகாபொல சான்றிதழ் பெறவில்லை. சிலர் படிவத்தை பெறவும் இல்லை திருப்பி ஒப்படைக்கவும் இல்லை.

எனவே இதுவரை லிஸ்டில் கையொப்பமிடாத மாணவர்களின் பெயர்ப்பட்டியல் இணையத்தளத்தில் தரப்பட்டுள்ளது. இந்த லிஸ்ட் மகாபொல நிதியத்திற்கு மாணவர்களின் கையொப்பங்களுடன் திருப்பி அனுப்பப்பட்டால் மாத்திரமே மாணவர்களுக்கான கொடுப்பனவு வழங்கப்படும்.

எனவே குறித்த மாணவர்கள் யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்திற்கு வருகை தந்து தமது கையொப்பங்களை 30-09-2020இற்கு முன்னதாக இடல்வேண்டும். படிவத்தை இதுவரை பெறாத மாணவர்களும் 30.09.2020இற்கு முன்னர் வருகைதந்து இந்நடைமுறையை பின்பற்றல் வேண்டும்.

பூரணமாகாத படிவங்களுக்குரிய மாணவர்கள்