அனைத்து வருட கலைமாணி பட்ட மாணவர்களுக்கான அறிவித்தல்

அனைத்து மாணவர்களும் தத்தம் கற்கைநெறிகளை பதிவு செய்யும்படி அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது. சில மாணவர்கள் விருப்பத்திற்குரிய பாடநெறிகளை தெரிவு செய்வதில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பாடப்பதிவினை மேற்கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே 18.06.2020 தொடக்கம் எதிர்வரும் 19.06.2020 வெள்ளிக்கிழமை வரை இதுவரை பதிவு செய்யாத மாணவர்கள் பாடப் பதிவினை மேற்கொள்ளலாம்.

பாடத்தெரிவில் மாற்றம் செய்ய விரும்புவோரும் மாற்றம் செய்யலாம். ஏற்கனவே பதிவு செய்த மாணவர்களின் ஈமெயிலிற்கு அவர்கள் தெரிவு செய்த பாடங்களின் உறுதிப்படுத்தல் அனுப்பப்பட்டுள்ளது. மீண்டும் பாடங்களை மாற்றுவதாயின் அவ்வுறுதிப்படுத்தலில் ‘Edit’ இனை கிளிக் செய்து பாடத் தெரிவில் மாற்றம் செய்யலாம்.

எக்காரணம் கொண்டும் காலஎல்லை நீடிக்கப்படமாட்டாது.

நேரடியாக வகுப்புகளுக்கு சமூகமளிக்க மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டாலும் மாணவர்கள் எக்காரணம் கொண்டும் காலஎல்லை முடிவடைந்தபின்னர் பாடங்களை மாற்றுவதற்கோ பாடப்பதிவுகளை மேற்கொள்வதற்கோ இடமளிக்கப்படமாட்டாது என்பதனை கவனத்திற் கொள்க.

பிரதிப்பதிவாளர்

கலைப்பீடம்