அனைத்து வருட கலைப்பட்டப் படிப்பு மாணவர்களுக்குமான அறிவித்தல்

எம்மால் பாடப்பதிவுகளுக்கான (Subject Registration) விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலம் கோரப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்ட போதும் சில மாணவர்கள் பாடப்பதிவுகளை மேற்கொள்ளவில்லை என்பதனை அறியத் தந்துள்ளனர்

எனவே பாடப்பதிவுகளை மேற்கொள்ளாத மாணவர்களுக்காக மீண்டும் ஒருமுறை சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது.  பாடப்பதிவுகளை மேற்கொள்ளாத மாணவர்களின் விபரங்கள் தரப்பட்டுள்ளன.

இதில் குறிப்பிடப்பட்ட மாணவர்கள் 19.07.2020 மதியம் 12.00 மணிக்கு முன்னராக தமது பாடப்பதிவுகளை (Google form) மூலம்  மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.  முதலாம் வருட மாணவர்கள் தாம் முதலாம் பருவத்தில் கற்ற பாடங்களையே இரண்டாம் பருவத்திலும் கற்க வேண்டும்.  பாடங்களை மாற்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது. 

பாடப்பதிவுகளை மேற்கொள்ளாத மாணவர்கள் அரையாண்டு இறுதிப் பரீட்சைகளுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதனை கவனத்திற் கொள்க.

பாடப்பதினை மேற்கொள்ளாத மாணவர் விபரங்களை காண்பதற்கு

பாடப்பதினை மேற்கொள்வதற்கு

பிரதிப் பதிவாளர் / கலை